வனிதா போட்ட ஒத்த போட்டோ மொத்தமும் குளோஸ்…. எனக்கு செத்துரலாம் போல இருந்துச்சு…. கலங்கிப்போன பவர்ஸ்டார்….!!!!

தமிழ் சினிமாவில் கண்ணால் லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் பவர்ஸ்டார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது உடல் நலம் தேறி மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார்.

இதனிடையே இவர் அண்மையில் நடிகை சகிலா நடத்தி வரும் பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய இவர், நான் சினிமாவிற்கு வரும்போது 60 கோடி ரூபாய் செலவழித்தேன். அதன் பிறகு தான் நான் ஸ்டார் ஆக மாறினேன். சினிமாவில் நுழைந்தவுடன் பலரும் இவனெல்லாம் ஒரு நடிகனா என விமர்சித்தனர். நிறைய பணத்தை இதுவரை நான் இழந்துள்ளேன்.

ஒரு காலத்தில் எனக்கு இருந்த பிரச்சனைக்கு செத்து விடலாம் என்று கூட நினைத்தேன் . இருந்தாலும் அனைத்தையும் தாண்டி தற்போது முன்னுக்கு வந்துள்ளேன். தற்போது வனிதாவுடன் இணைந்து பிக்கப் படத்தில் நடித்து வருகின்றேன். படத்திற்காக ஒரு போட்டோ சூட் நடத்திய நிலையில் அதை அவங்க ட்விட்டரில் போட்டு இருந்தாங்க. அது இணையத்தில் வைரலான நிலையில் பலரும் என்னோட வீட்டிற்கு வந்து வனிதாவை கல்யாணம் பண்ணிட்டீங்களா என்று கேட்ட நிலையில் அதனை சமாளிக்கவே முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அது படத்திற்காக எடுக்கப்பட்டது என வனிதா ஓப்பனாக சொல்லிட்டாங்க . அது மட்டுமல்லாமல் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது என கூறினார். வனிதா மிகவும் நல்லவங்க. தனக்கு என்ன தோணுதோ அதை தயங்காம அப்படியே சொல்லிடுவாங்க. வனிதா பிரச்சனையை வீட்ல யாரும் நம்பல.அதன் பிறகு தான் எல்லாம் சினிமாவுக்காக தானே என ஃப்ரீயாக விட்டுட்டாங்க. நான் இப்போது நாயகனாக நடித்து வருகிறேன் என பவர் ஸ்டார் கூறியுள்ளார்.