கையில் குழந்தையை வைத்து கொஞ்சி விளையாடிய விஜய்…. யாருடைய வாரிசு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.வம்சி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் தாஸ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,யோகி பாபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.  வாரிசு திரைப்படத்தில் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அந்த புகைப்படத்தில் விஜய் தனது கையில் ஒரு குழந்தையை வைத்துள்ளார். அந்த குழந்தை யாருடைய வாரிசு என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த குழந்தை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தை தான் என தகவல் வெளியாகி உள்ளது.சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவரின் குழந்தையை விஜய் தனது கையில் வைத்து கொஞ்சும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.