1 அல்ல 2 அல்ல 3 முறை திருமணம் செய்த விஜய் டிவி புகழ்…. இதுதான் காரணம்…. விமர்சனங்களுக்கு தக்க பதிலடி….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இருந்தாலும் விஜய் டிவி கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடிகளுக்கு அளவே இல்லை. அந்நிகழ்ச்சியை தொடங்க இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சபாபதி, வலிமை, யானை மற்றும் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளும் இவர் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் புகழ் 5 வருடமாக காதலித்து வந்த பென்சி என்பவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே புகழ் மற்றும் பென்சி இருவரும் கடந்த வருடமே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அந்த புகைப்படங்களும் நேற்று வெளியிடப்பட்டது.

முதலில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் உற்றார் உறவினர் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தனர். இதனிடையே ஒருபுறம் சுயமரியாதை திருமணம் மறுபுறம் கோவிலில் திருமணமாய் என சிலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது புகழ் அதற்கு பதில் அளித்துள்ளார்.

ஏற்கனவே சுயமரியாதை முறையில் திருமணம் மற்றும் இந்து முறை திருமணம் செய்த புகழ், இஸ்லாம் முறைப்படி திருமணம் முடித்த புகைப்படத்தை தற்போது பதிவிட்டு, என் தந்தையின் அன்பிற்காக ஒரு முறை, என் அன்பு மனைவியின் அன்பிற்காக ஒரு முறை திருமணம் செய்து கொண்டேன். என் மீது அன்பு செலுத்தும் வேறு எந்த அன்பு உள்ளங்கள் ஆவது ஆசைப்பட்டால் அவர்களுக்காகவும் இன்னொரு முறை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக விமர்சனங்களுக்கு புகழ் பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.