மகனின் முதலாவது பிறந்த நாளை…. பிரமாண்டமாக கொண்டாடிய விஜய் டிவி சீரியல் நடிகர்…. வைரலாகும் வீடியோ…..!!!!

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியல். இது முழுக்க முழுக்க காதல், குடும்பம் மற்றும் அரசியல் ஆகிய பின்னணியில் உருவாகியது. இதனை அப்துல் கபீஸ் என்பவர் இயக்கி இருந்தார்.இந்த சீரியலில் முன்னணி நடிகர்களாக வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி நடித்தனர்.

ஆனால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.இருந்தாலும் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வினோத் பாபு ஆரம்பத்தில் ஒரு நடன கலைஞராக இருந்தார். அதன் பிறகு காமெடி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தவர். இருந்தாலும் இவர் பிரபலமானது சுந்தரி நீயும் சுந்தரன் நானும் இந்த சீரியல் மூலம்தான்.

இந்த சீரியலை தொடர்ந்து பல விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார். தற்போது இவர் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி வருகிறார். இதனிடையே வினோத் பாபு கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது.

இதனை தொடர்ந்து வினோத் பாபு மற்றும் சிந்து தம்பதியினருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் வினோத் பாபு தனது மகனின் முதலாவது பிறந்த நாளை மிக கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.