“நீங்க நல்லா இருக்கணும்”…. அஜித்தை ஆசீர்வதித்த மூதாட்டி….. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார்.

இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் படத்தில் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர் நடிகர் அஜித்தை ஆசீர்வாதம் செய்யும் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.துணிவு படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து அஜித் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் அஜித்தை பார்த்த மாற்று திறனாளி ஒருவர் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.அப்போது அங்கிருந்த மாற்று திறனாளி மூதாட்டி அஜித்துடன் பேசியதுடன் அவரின் தலையில் கை வைத்து நன்றாக இருக்க வேண்டும் என ஆசீர்வதித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.