விஜய் டிவி சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்…. வெளியான அதிர்ச்சி காரணம்?…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கல்யாண் குமாரின் மகன் தான் பாரத் குமார். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.பல கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் சிருங்காரம் என்ற திரைப்படத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதன் பிறகு யக்கா, பயணம் மற்றும் பகவத் ஸ்ரீ ராமானுஜா போன்ற பல கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் எவ்வாறு நடித்துள்ளார்.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் மனைவி பிரியதர்ஷினி நேற்று திடீரென உயிரிழந்தார். பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 43 வயதில் பிரியதர்ஷினி உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியான நிலையில் அவரின் இறுதிச்சடங்கு இன்று சென்னையில் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து அவரின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்த போது பிரியதர்ஷினி நீண்ட நாட்களாக போலியோ டயட்டில் இருந்து வந்ததால் அவரின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்ததாகவும் இதனால் அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமானதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.