சிவகார்த்திகேயன் மகளுடன் புகைப்படம் எடுத்த பிரபல தமிழ் நடிகை…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 10 நாளில் 45 கோடி வரை வசூல் செய்தது. இன்றும் பல திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனிடையே இளம் நடிகையான பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் மற்றும் டான் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர்.அவர் தற்போது சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.