விஜய்யின் கேரியரில் படுதோல்வியை சந்தித்த படம்….. மொத்த வசூலே இவ்வளவுதான்…. ரசிகர்கள் ஷாக்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். அவரின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றார். மேலும் பல முக்கிய பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கிறார்கள்.

படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே விஜய் நடித்த வில்லு திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வில்லு. இப்படத்தில் விஜய் உடன் இணைந்து நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முதலில் பிரபுதேவா மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக இணைந்த போக்கிரி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவர் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் தான் வில்லு.

இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை மட்டுமே அளித்தது. படம் அந்த அளவிற்கு ஓடவில்லை. இந்நிலையில் விஜயின் கேரியரில் படு தோல்வி அடைந்த இந்த திரைப்படம் வெறும் 29 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.