விஜயின் மகன் போட்ட ட்விட்டர் போஸ்ட்…. ரசிகர்களுக்கு இப்படி ஒரு ஷாக் நியூஸ்…. வெளியான பகீர் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வருபவர் தளபதி விஜய். இவர் அண்மையில் நடித்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக களம் இறங்குகிறார். அதனால் மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ் மட்டும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் யோகி பாபு, பிரகாஷ் ராஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.

குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய படமாக வாரிசு உருவாகி வருகிறது.அதனால் ரசிகர்கள் மத்தியில் வழக்கத்தை விட வாரிசு திரைப்படத்திற்கு அதிக அளவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே வாரிசு திரைப்படம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வபோது இணையதளத்தில் கசிந்து கொண்டே இருக்கின்றன.

அதனால் பட குழுவினர் கூடுதல் பாதுகாப்போடு படப்பிடிப்பை தற்போது நடத்தி வருகிறார்கள். இருந்தாலும் அவ்வபோது சில வீடியோக்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.இந்நிலையில் இது குறித்து விஜயின் மகன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படத்தில் லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அந்தப் பதிவு இணையத்தில் வைரலான நிலையில் தற்போது விஜய் தரப்பிலிருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது விஜயின் மகன் சஞ்சயின் உண்மையான twitter பக்கம் அது இல்லை என்றும் விஜயின் மகன் சஞ்சய் ட்விட்டர் உட்பட எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் கணக்கு வைக்கவில்லை என கூறப்படுகிறது.எனவே இதனைத் தொடர்ந்து விஜயின் மகன் பெயரில் வெளிவந்துள்ள twitter போஸ்டர் போலி கணக்கு என தெரியவந்துள்ளது.