விஜய்யின் வாரிசு திரைப்படம்….. இணையத்தில் லீக்கான சூட்டிங் ஸ்பாட் வீடியோ….. தளபதி ரசிகர்கள் ஷாக்…..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட்.

ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு  படத்தின் சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் வாரிசு படத்தின் சூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதில் மருத்துவமனையில் விஜய்,சரத்குமார் மற்றும் பிரபு உள்ளிட்டோர் முக்கிய காட்சிகளில் நடிக்கும் சூட்டிங் நடைபெற்று உள்ளது. அப்போது அங்கிருந்த ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்த நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு அருகில் இருந்து வீடியோ எடுத்துள்ளாரே என்று அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

https://twitter.com/Varisu_Offl/status/1559044196975013890