“உங்க குடும்பத்துக்கு நாங்க இருக்கோம்”…. வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு உதவும் பிரபலங்கள்…. அவரின் மனைவி உருக்கமான பதிவு….!!!

காமெடி கலைஞர் வடிவேல் பாலாஜி விஜய் டிவியில் பிரபலம். காயம் பட்ட எத்தனையோ இதயத்திற்கு மருந்தானவர். பலரது மனம் பாரத்தை குறைத்தவர். தினம்தோறும் கிளம்பும் டென்ஷன் மற்றும் எகிறும் பிரஷர் ஆகியவற்றை தூக்கி வீசி அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்த வரப் பிரசாதம் இவர்தான். இவர் பொதுவாகவே மெதுவாக நிறுத்தி நிதானமாக பேசி யாருமே பார்த்ததில்லை. கலக்கப்போவது யாரு சீசன் 4 மூலமாக அறிமுகமானவர் இவர்.

 

அதில் வெற்றி பெறவில்லை என்றாலும் இவரது காமெடியால் மக்களை வெகுவாக ஈர்த்தவர். நடிகர் வடிவேலுவை எத்தனையோ பேர் இமிடெட் செய்து மிமிக்ரி செய்திருந்தாலும், யாருமே செய்ய முடியாத கேரக்டர்களைப் போல வடிவேல் பாலாஜி துணிந்து எடுத்து பேசியது தான் இவரது பிளஸ் பாயிண்ட். அப்படிப்பட்ட இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் உறுப்புகள் செயலிழந்து மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் வடிவேலு பாலாஜி உயிரிழந்த போது பலரும் அவரின் குடும்பத்திற்கு உதவுவதாக அறிவித்தனர். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் குழந்தைகளின் படிப்பு செலவு ஏற்று இப்போது அதனை தொடர்ந்து செய்து வருகிறார்.அதனைப் போலவே ஈரோடு மகேஷ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவி செய்து வருகிறார்.

சமீபத்தில் வடிவேல் பாலாஜி வீட்டிற்கு சென்று குக் வித் கோமாளி புகழ் தனது திருமணத்திற்காக அவரின் வீட்டில் உள்ள அனைவருக்கும் புதிய டிரஸ் வாங்கி கொடுத்தார். பிரபலங்கள் பலரும் தங்கள் குடும்பத்திற்கு உதவி செய்வதை வடிவேலு பாலாஜியின் மனைவி பகிர்ந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு உதவும் பிரபலங்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.