பிரபல இளம் நடிகைக்கு கேக் ஊட்டி விட்டு, தன்னுடைய 62 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வடிவேலு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் காமெடி நடிகர் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களின் எப்போதும் இவரது பெயர்தான். ஒரு ட்ரோல் செய்தால் கூட அதில் கட்டாயம் வடிவேலு பெயர் இடம் பெற்று இருக்கும். சமூக வலைத்தளங்களின் நெட்டிசனல் பலரும் இவரை வைத்து தான் ட்ரோல் செய்கின்றனர். அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர்.

நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கும் இவரது நடிப்பில் தற்போது நாய் சேகர் returns மற்றும் மாமன்னன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதில் நடிகர் வடிவேலு ஹீரோவாக களமிறங்குகிறார்.பல வருடங்களுக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் இந்த இரண்டு திரைப்படங்களையும் திரையில் காண வடிவேலு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் வடிவேலு நேற்று தனது 62 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே உதயநிதியின் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு நடித்து வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்களும் இணைந்து கொண்டாடினர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.