“என்ன விட்டு போகாத”….. தேம்பி கதறி கதறி அழுத ஆட்டுக்குட்டி…. நொறுங்கிப்போன ஓனர்…. மனதை கலங்க வைக்கும் வீடியோ….!!!!

ஆடு ஒன்று தனது உரிமையாளரை பார்த்து கதறி அழும் வீடியோ காண்போரை கண் கலங்க வைக்கிறது. குர்பானிக்காக ஆட்டை விற்பதற்காக அதன் உரிமையாளர் சந்தைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த ஆட்டை ஒரு நபர் விலை பேசி உள்ளார். அச்சமயம் திடீரென அந்த ஆடு ஓனரை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறியாளர் தொடங்கியது. அதனை சமாதானப்படுத்த முயன்றும் ஓனரால் முடியவில்லை. அழுகையை ஆடு நிறுத்தவே இல்லை.

அந்த காட்சியை பார்த்து சந்தைக்கு வந்தவர்கள் அனைவரும் கண்கலங்கி நின்றனர். அதனுடன் சேர்ந்து ஓனரும் அழுதார். இதனைப் பார்த்த ஆட்டினை வாங்க வந்த நபர் பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டு அந்த ஆட்டினை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றார். அதன் பிறகு தான் ஆடு அழுகையை நிறுத்தியது. மனதை கலங்க வைக்கும் இந்த பாச போராட்டத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.