இயக்குனர் விக்னேஷ் சிவன் -நடிகை நயன்தாரா திருமணம் கடந்த மாதம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றனர். அங்கு எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். தற்போது ஹனிமூன் எல்லாம் முடிந்து தனது நடிப்பிற்கான வேலையை நயன்தாரா பார்க்கத் தொடங்கி விட்டார். தற்போது ஷாருக்கானுடன் அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா குறித்த தகவல் ஒன்றை இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதாவது நயன்தாராவுக்கு கைகடிகாரங்கள் என்றாலே மிகவும் பிடிக்குமாம். அதனால் மிக விலை உயர்ந்த கைகடிகாரங்களை வாங்கி அவர் பத்திரமாக வைத்துக் கொள்கிறார். வெளிநாடு சென்றாலே கைக்கடிகாரம் வாங்காமல் அவர் திரும்புவதில்லை. அப்படித்தான் வாங்கும் கைகடிகாரங்களை பத்திரமாக வைக்கவே வீட்டில் ஒரு தனி பீரோ அவர் வைத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக Richard Mille கைக்கடிகாரங்கள் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். அப்படி அவர் விரும்பி அணியும் கைக்கடிகாரத்தின் விலை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கைக்கடிகாரங்களை சேமிப்பது மட்டுமல்லாமல் தனக்கு பிடித்தவர்களுக்கு அதனை பரிசாக கொடுத்து மகிழ்வார் நயன்தாரா. தனக்கு பிடித்த யாருக்காவது பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பதில் காசு பணம் எல்லாம் பார்க்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.