என்னம்மா இது?…. கோவிலுக்கு அப்படி ஒரு ஆடையில் சென்ற தமன்னா…. வீடியோவை பார்த்து பெருமூச்சு விட்ட ரசிகர்கள்….!!!!

ஹிந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம்ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

அது மட்டுமல்லாமல் தனது மெல்லிடையால் ரசிகர்களின் கனவு கண்ணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் தமன்னா தற்போது பெரிய ஹீரோ படங்களில் எதுவும் கமிட்டாகவில்லை.கடந்த சில நாட்களாகவே மலையாள படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில் தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே ரசிகர்களை கவருவதற்காக தமன்னா தற்போது விழாக்களில் கலந்து கொள்ளும்போது அதிக கிளாமரான உடைகளை போட்டு வருவதால் பலரும் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு அதிக கிளாமரை காட்டுகிறார். இதனிடையே மலையாளத்தில் தற்போது களமிறங்கியுள்ள தமன்னா நடிகர் திலீப் ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Tamannaah Bhatia இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamannaahspeaks)

இந்தத் திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் கேரளாவில் இருக்கும் மகா கணபதி கோவிலில் நடைபெற்றது. இந்நிலையில் பூஜைக்கு தமன்னா அணிந்து வந்த சேலை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.