பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் முதல் முதலாக எம் எஸ் தோனியின் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களிலும் தற்போது வரை பிசியான முன்னணி நடிகையாக நடித்து வருகின்றார்.

இதரிடையே இவரும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல் ஹோத்ராவும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவர்கள் இது குறித்த தகவலை உறுதிப்படுத்தாமல் இருந்தன. இருந்தாலும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்வது போன்ற பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் முதல் முறையாக தங்களது காதலை வெளிப்படையாக கூறியுள்ளனர். அதன்படி disney+ hotstar-ல் ஒளிபரப்பாகும் காபி வித் கரன் நிகழ்ச்சியில் கியாரா அத்வானி மற்றும் சித்தார் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது அந்நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவிடம் காதலிக் கியாராவுடன் எப்போது திருமணம் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சித்தார், ஆம் நாங்கள் இருவரும் நீண்ட காலமாக எங்களுடைய எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு வருகிறோம். சரியான நேரம் வரும்போது எங்கள் எதிர்கால திட்டங்களை பற்றி நிச்சயமாக தெரிவிப்போம் என்று பதில் அளித்தார். எனவே இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

எனவே விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளது இந்நிகழ்ச்சியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது பாலிவுட் திரை உலகில் டாப் செய்தியாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.