விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். அதில் ஆறாவது சீசன் மிக விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.முதலில் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து தானாக முன்வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முதல் வார பிக் பாஸ் நாமினேஷனில் இடம்பெற்று இருந்த சாந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் பெண்களிடம் பல சில்மிஷம் செய்து சர்ச்சையில் சிக்கிய அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதனைப் போலவே இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டு மக்களிடம் மிகக் குறைந்த வாக்குகளை பெற்ற செரீனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.பிக் பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்குவது யார் என்பது குறித்த ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த செய்தி ரசிகர்கள் பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.