நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்து முடிந்தது. மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடந்தது. இதில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், அப்போது ஒரு சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஹனிமூன் சென்று இருந்தனர். பின்னர் சென்னை திரும்பிய இருவரும் அவரவர் வேலைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டனர். அதன்படி நயன்தாரா , ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

மறுபக்க விக்னேஷ் சிவன் இயக்குனராக தனது பணிகளை தொடங்கி விட்டார். இதனிடையே தமிழகத்தில் முதல்முறையாக 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கியது. நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பு விக்னேஷ் சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை விக்னேஷ் சிவன் பொறுப்பாக செய்து முடித்தார்.

இந்நிலையில் செஸ் ஒலிப்பியா தொடக்க நிகழ்ச்சியை பார்த்து நயன்தாரா வெகுவாக பாராட்டியதாக கணவர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இயக்குனராக என்னுடைய முதல் நேரலை நிகழ்ச்சி இது என்பதால், எப்படி நிகழப் போகிறது என்று பயந்தேன்.

ஆனால் நல்லபடியாக நடந்து முடிந்தது. முடிந்த உடனேயே நயன்தாரா தான் எனக்கு முதல் மெசேஜ் அனுப்பினார். வாவ், ஆச்சரியமாகவும், நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாகவும் இருந்தது என்று கூறி என்னை வாழ்த்தினார் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.