ரஜினியின் வீட்டில் விசேஷம்…. அதுவும் இளைய மகள் சௌந்தர்யாவுக்கு…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்……!!!!

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் என்றால் அவர் ரஜினி தான்.சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்துள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அவருக்கு வயதானாலும் அவரின் நடிப்பிற்கு இன்னும் வயதாகவில்லை. அப்போது இருந்த அதே ஸ்டைலில் இன்றளவும் கலக்கி வருகிறார். இப்படி பல்வேறு புகழுக்குரிய இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

முதல் மகள் ஐஸ்வர்யா,தனுசை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

இதனிடையே கடந்த வாரம் கணவர் விசாகனின் வீட்டில் சௌந்தர்யாவுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. அந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கலாம் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர்.

சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். மகளின் வளைகாப்பில் ரஜினி கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.