தமிழ் சினிமா தொலைக்காட்சியில் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதற்கு கோடிக்கணக்கான ரசிகர்களும் உள்ளன. இந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் தான். இதில் பொதுவாக குடும்ப கதைகள் மற்றும் காதல் கதைகளை மையமாகக் கொண்டுதான் சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக முதல் 10 இடங்கள் எடுத்துக் கொண்டால் இந்த சேனல் நிகழ்ச்சிகள் தான் இடம்பெறும். இந்த தொலைக்காட்சிகளில் பணியாற்றி நடிகைகள் பலரும் தற்போது முன்னணி நடிகைகளாக மாறியுள்ளனர்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி மற்றும் யாரடி நீ மோகினி என்ற சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் சோபனா மற்றும் ரேஷ்மா.

தற்போது இவர்கள் வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது சோபனா மற்றும் ரேஷ்மா இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் அறிமுக படமாக அமைந்துள்ள படத்தின் பெயர் பகையே காத்திரு. படத்தின் பெயர் தவிர மற்ற எந்த ஒரு தகவல்களும் வெளியாகவில்லை.
