இன்றைய காலகட்டத்தில் மக்களை கவரும் வகையில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு கலைஞர்களும் கருதுகின்றனர். அதன்படி தான் பேசும் மேடைப்பேச்சுகளிலும் கூட அனைவரையும் கவரும் வகையில் வித்தியாசம் காட்டி அசத்துப்பவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். இவரின் நடிப்பு மற்றும் இயக்கத்தை தாண்டி தமிழ் பேச்சுக்கு பலரும் அடிமை.

ஒரு சிறிய விஷயத்தை கூறினாலும் அதில் கொஞ்சம் சிரிப்பு நிறைய சிந்தனையை கலந்து தான் அவர் பேசுவார். அப்படிப்பட்டவரின் இயக்கம் மற்றும் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் இரவின் நிழல். இந்தத் திரைப்படம் மிகவும் அற்புதமான விமர்சனங்களை பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது.

ஆனால் இந்த படத்திற்கு வழக்கம் போல Blue Sattai மாறன் எதிர்மறையாக பேசியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் பார்த்திபன் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
