தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகி பாபு. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அந்தப் படத்திற்கு பிறகு தான் பாபு என்ற தனது பெயரை யோகி பாபு என மாற்றிக்கொண்டார்.

திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மான் கராத்தே மற்றும் யாமிருக்க பயமே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். குறிப்பாக காக்கா முட்டை என்ற திரைப்படம் தான் இவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தனியாக பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே இவர் பார்கவி என்ற பெண்ணை கடந்த 2020 ஆம் ஆண்டு மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான அதே ஆண்டே டிசம்பர் மாதம் இந்த தம்பதிக்கு விசாகன் என்ற மகன் பிறந்த நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கும் தந்தையாகியுள்ளார் யோகி பாபு.தீபாவளி திருநாளான நேற்று காலை சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.தீபாவளி தினத்தில் திருமகளை பெற்றெடுத்த யோகி பாபுவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
