நீலிமா ராணி “தேவர்மகன்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் தொடர்ந்து இன்று வரை நடித்து கொண்டு இருப்பவர். சின்னத்திரையிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். நடிகை நீலிமா ராணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் சீரியலில் நடித்த அஸ்வின் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

தற்பொழுது தலையணை பூக்கள் மற்றும் அரண்மனை கிளி போன்ற தொடர்களில் தொடர்ந்து முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். நீலிமா சினிஉலகத்திலும், சின்னத்திரையிலும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நடிகை ஆவார். இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார்.

“வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள்” ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் “நிறம் மாறாத பூக்கள்” சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார். வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், நாயகிகளுக்கு இணையாக ரொமான்ஸ் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
கடற்கரையில் நீலிமா ராணியின் டூயட் சாங் pic.twitter.com/AKtRvVKO47
— tiktokbeauties (@tiktokbeauties2) November 24, 2019