தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2010 ஆம் ஆண்டு நீ தானே அவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி கு ற்றம், அவர்களும் இவர்களும், விளையாட வா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி பிரபலமடையவில்லை.

இதனையடுத்து ரம்மி என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து தனது திறமையை வெ ளிப்படுத்தினார். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். காக்கா முட்டை, தர்மதுரை, வட சென்னை, கனா மற்றும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால், சமீபகாலமாக ஒரு பக்க ரசிகர்கள் வெ றுப்பு க ருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதற்கு காரணம், ஐஸ்வர்யா ராஜேஷ் உகாதி வாழ்த்துக்கள் கூறியது தான். உகாதி வாழ்த்து கூறியதால், நீங்கள் தெலுங்கா..? வந்தேறியா..? என்று கிளம்பி விட்டனர் ஒரு குழுவினர். இப்போது, அந்த குழுவினர் யாரென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆம், தமிழ் நாடு, தமிழன் என்ற பெருமையை, தலைக்கனமாக மாற்றி தலையில் ஏற்றி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருப்பவர்களை வந்தேறி என்று இழிவாக பேசிக்கொண்டிருக்கும் அந்த ஒரு சிலர் தான்.

அவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவதே இல்லை. இங்கு எப்படி வெளி மாநிலத்தவர்கள் வந்து பிழைப்பு நடித்துகிறார்களோ..? அதே போல தான், நம்ம தமிழ்நாட்டில் இருந்தும் லட்சக்காணக்கானோர் வெளிமாநிலங்களில் வேலை செய்கின்றார்கள். அப்போது, தமிழர்கள் எல்லாம் அந்த மாநிலங்களின் வந்தேறிகள் என்றால் நாம் ஒப்புக்கொ ள்வோமா..? இந்தியன் என்ற உணர்வே இன்று சிலர் மத்தியில் இல்லை என்பது கசப்பான உண்மை.