மலையாள நடிகை, நவ்யா நாயர், 20 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப்புக்கு ஜோடியாக மலையாளத்தில் இஷ்டம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் அந்த படத்திற்கு பின் பள் ஹிட் படங்களை கொடுத்து டாப் கியரில் சென்றார். தமிழில் இவர் அறிமுகமாகிய படம் பிரசன்னா நடிப்பில், ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த அழகிய தீயே படம்தான். பிறகு பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, என்று பல படங்களில் நடித்தார்.

அதன் பிறகு இவர் திருமணம் செய்து Lifeல Settle ஆகிவிட்டார் . திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த நவ்யா நாயர், தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, என்னுடைய முதல் படம் இஷ்டம். அந்த படத்தின் இயக்குனர் சிபி எனது புகைப்படத்தை பார்த்து விட்டு ஒரு Hotelக்கு கூப்பிட்டார். நானும் சென்றேன், அங்கு என்னை Audition செய்தார்.

அந்த வீடியோவை திலீப் பார்த்து என்னை ஹீரோயினாக போட ஒத்துக்கொண்டார். அப்போது மட்டும் அவர் வேண்டாம் என்று சொல்லி இருந்தால் நான் சினிமாவுக்கே வந்து இருக்கமுடியாது. படப்பிடிப்பின் முதல் நாள் படத்தின் Photoshoot எடுத்தார்கள்.அப்போது திலீப் என்னிடம் தோளில் கைவைத்தபடி போஸ் கொடுத்தார்.
உடனே எனக்கு பயம் ஏற்பட்டது. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பொண்ணு, என் மேல அறிமுகம் இல்லாத ஆண் கைவைத்ததால் பயந்துடேன். உடனே திலீப் ” பயப்பட வேண்டாம். நாம் இந்த படத்தில் ஒன்றாக வேலை போகிறோம் என்று எனக்கு தைரியம் சொன்னார். அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது” என்று கூறியுள்ளார்.
