அரியக்குடி என்னும் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருடைய கணவர் 13 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குடும்பத்திற்கு தெரியாமல் தகாத உறவின் மூலம் சரஸ்வதி 3-வதாக பெண் குழந்தையை பெற்றுள்ளார். இதனால் விரக்தி அடைந்த சரஸ்வதி குழந்தையை அப்பகுதியில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளார். குழந்தை அழும் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தைக்கு முதலுதவி செய்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதே மருத்துவமனையில் ரத்தப்போக்கு சரஸ்வதி சிகிச்சைக்கு சென்றார். அப்போது மருத்துவர்கள் கேட்ட கேள்விக்கு சரஸ்வதி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் முட்புதரில் வீசப்பட்ட குழந்தை தன்னுடையது தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

தான் பெட்ரா குழந்தையை தானே தூக்கி வீசிய மனசாட்சி அற்ற இது போப்ன்ற தாயும் இந்த உலகத்தில் நம்முடன் உள்ளனர் எனபது மிகவும் கோபம் அளிக்கிறது.
மேலும் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.