இளம் பெண் ஒருவர் தனது குழந்தையை பெற்று எடுத்த அரை மணி நேரத்திற்க்குள்ளாக மருத்தவ மனையின் படுக்கையில் இருந்த படியே பரீட்சை எழுதியதுக் காண்போரை நெகிழ செய்வதாக இருந்தது. எத்தோப்பியாவின் 21 வயதான அல்மா டிரேஸ், தனது கர்ப்பகாலத்திலும் கல்வியை தொடர்ந்து வந்தார், எதிர்பாராத விதமாக ரமலான் தினத்தை ஒட்டி தேர்வுகள் தாமனதமானதால் , குழந்தை பெறுவதற்க்காக அவர் கடந்ததிங்களன்று மேற்கு எதியோப்பியாவின் ஒரோமியா பிராந்தியத்தில் கார்ல் மெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

இந்த நிலையில் தனது மகனை பெற்று அடுத்த அரை மணி நேரத்திற்க்குள்ளாக மருத்துவ மனையின் படுக்கையில் உட்கார்ந்தபடியே அல்மாஸ் கணித, ஆங்கிலம் உள்ளிட்ட பரீட்சயை எழுதி முடித்தார்.மேலும் மீதமுள்ள பாடங்களை இந்த வாரத்தின் இறுத்துக்குள்ளாக உள்ளூர் தேர்வு மையத்தில் எழுத உள்ளார்.

இது குறித்து பேசிய அல்மாஸ் கணவர் டாடிஸ் துலு பலத்த போராட்டத்திற்கு பின்பு தான் அல்மாஸ் மருத்துவமனையிலிருந்து பரீட்சையை எழுதினார் எனவும் அவர் தனது கர்ப்ப காலத்திலும்
இவ்வளவு கடின உழைப்பை கொடுத்திருப்பது குறித்து பெருமிதம் கொண்டார். மேலும் 21 வயதான அல்மோஸ் அடுத்த கட்டமாக மேலும் ஒரு இரண்டு வருட படிப்பை வெற்றிகரமாக பல்கலைக்கழகத்தில் துவங்குகிறார்.
