பெண்களுக்கு எதிரான பா லியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.குறிப்பாக சிறுவயது பெண்கள் கூட இதுபோன்ற கொடுமைக்கு ஆளாக்க படுகிறார்கள்.மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் இதுபோன்ற கொடுமைக்கு ஆளாக்கபடுவது நமக்கு அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. ஒரத்தநாடு அடுத்துள்ள ஊர் திருவோணம். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், ஆசிரியராக வேலை பார்ப்பவர்தான் சாரங்கபாணி. சங்கரன்கோவிலை சேர்ந்தவர். வயது 30 ஆகிறது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ , மாணவிகளுக்கு பாடம் எடுத்துவந்தார். இவர் மீது 3 மாதத்துக்கு முன்பு ஒரு பா லியல் புகார் வந்தது. புகார் அளித்தது, இவரிடம் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்தான்.

ஆனால் அதிகாரிகளோ இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை என்றும், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு அரசு பள்ளிக்கு இவரை பெயரளவில் டிரான்ஸ்பர் செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், திரும்பவும் இதே திருவோணம் பள்ளிக்கு சாரங்கபாணி நேற்று வந்துவிட்டார். யாரை பிடிச்சு டிரான்ஸ்பர் வாங்கினாரோ தெரியவில்லை.. இதே ஆசிரியர் பள்ளிக்கு வந்துவிடவும் மாணவிகளுக்கு திக் திக் என்று ஆகிவிட்டது. பெற்றோர்களோ ஆத்திரம் வந்து பள்ளி முன்பு ராத்திரி 10 மணி வரை போராட்டமே நடத்தினர்.

போலீசார் பெற்றோர்களை சமாதானப்படுத்தினார்களே தவிர, பிரச்சனைக்கு விடை ஏதும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில்தான் துணிந்து ஒரு மாணவி புகார் தந்தாள். “சாரங்கபாணி சார், எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆ பாச படம் காட்டி தொல்லை பண்றாரு” என்று பரபரப்பு புகார் சொல்லவும் பட்டுக்கோட்டை மகளிர் போலீசார் இந்த விஷயத்தை கையில் எடுத்தனர். இப்போது, இந்த ஆ பாச வாத்தியார் சாரங்கபாணி போக்சோவில் கைதாகி உள்ளார். இதைதவிர, அந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கதுரை இன்னொரு புகார் தந்துள்ளார்.

தவறுகளை தட்டி கேட்டதால், சாரங்கபாணி தனக்கு கொ லை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் கூறியுள்ளார். ஆக மொத்தம், 2 புகார்களில் போலீசார் தனித்தனி வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். “நம்பிதானே எங்க பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பறோம், இப்படி நாசம் செய்யலாமா? டிரான்ஸ்பர் கிடைத்த இவருக்கு திரும்பவும் அதே பள்ளியில் டிரான்ஸ்பர் யார் தந்தது? இந்த காமுகனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்” என்று பெற்றோர்கள் புலம்பி வருகின்றனர்.