தலைவா அப்போ அவங்க இவங்க இல்லையா..!!! சதீஷின் மனைவி ஆக போவது இவர் தானாம்..!!! ட்விஸ்ட் வைத்த சதீஷ்.

நகைச்சுவை நடிகர் நடிகர் சதீஷ் இவர் “தமிழ் படம்” என்ற படத்தில் அறிமுகம் ஆகி மதராசபட்டினம், வாகைசூடவா படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் சிவகார்த்திகேயன் “எதிர்நீச்சல்” என்ற படம் தான் இவருக்கு சற்று அடையாளத்தை கொடுத்தது பிறகு “மான்கராத்தே” என்ற சிவகார்த்திகேயன் படத்தில் சதீஷ் அடிக்கும் கவுண்டர் எல்லாம் ரசிக வைத்தது சந்தானம் இல்லாத குறையை சதீஷ் தீர்ப்பார் என்று மக்களுக்கு ஒரு சந்தோஷம் இருந்தது.

சிவகார்த்திகேயன் படத்தில் சிட்டி சப்ஜெக்ட் என்றால் சதீஷும், வில்லேஜ் சப்ஜெக்ட் என்றால் சூரியும் மாற்றி மாற்றி நடிக்க தொடங்கினார்கள். இந்நிலையில் தளபதி விஜய் ரசிகரான சதீஷுக்கு விஜயுடன் நடிக்க “கத்தி” படத்தில் வாய்ப்பு வந்தது. அதன் பிறகு விஜயின் “பைரவா” படத்திலும் விஜய்க்கு நண்பனாக நடிக்க வாய்ப்பு வந்தது. பைவரா ஷூட்டிங் நேரத்தில் நடிகை கீர்த்திசுரேஷுடன் சதீஷுக்கு காதல் என்றும் அவர் அம்மாவிடம் சதீஷ் பொண்ணு கேட்டார்

என்றும் இணையத்தில் வதந்திகள் பரப்பி வந்தார்கள். அதற்கு தகுந்தது போல கீர்த்தியுடன் மாலையுடன் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதன் பின் அதற்கு விளக்கம் கொடுத்தார் சதீஷ். இணையத்தில் பரவும் புகைப்படம் பைரவா படப்பிடிப்பின் பூஜையில் எடுக்கப்பட்டது என்று சொல்லி இருந்தார். தற்பொழுது சதீஷ் ஒரு பெண்ணுடன் நிச்சயம்

செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது சதீஷ் கூடிய விரைவில் திருமணம் செய்ய போவதாக அறிவித்து இருந்தார். தற்பொழுது திருமண அழைப்பிதழை தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் OPS அவர்களுக்கும் கொடுத்தாக இணையத்தில் பதிவிட்டு உள்ளார்.வைரலாகும் அந்த புகைப்படம் இதோ