திருடன் என்று 7மணிநேரம் அடித்து துன்புறுத்தல்: எனக்கு யாரும் இல்லை..கதறிய இளம் மனைவி?

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தப்ரெஸ் அன்சாரி என்ற இளைஞர். இவர் கடந்த 18ஆம் திகதி நண்பர்களுடன் சென்றிருக்கும் போது அன்சாரி இருசக்கர வாகனம் ஒன்று திருடியதாக கூறி அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து 11பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளது. தொடர்ந்து தாக்கிய வீடியோவை சமூகவலைதளத்தில் பரப்பி உள்ளது. இதற்கிடையில், இஸ்லாம் மதத்தை பின்பற்றும் அன்சாரியை `ஜெய் ஸ்ரீ ராம்’ எனச் சொல்லும்படியும் அந்தக் கும்பல் வற்புறுத்தியுள்ளது. இறுதியாக அன்சாரி மயங்கிய பிறகே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடுமையாக காயம் அடைந்த அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், அன்சாரியைத் தாக்கிய அந்தக் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரின் உறவினர்களும் நண்பர்களும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொடர் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த விவகாரம் பற்றி பேசிய அன்சாரியின் மனைவி, என் கணவர் இஸ்லாமியர் என்பதால் கருணையே இல்லாமல் தாக்கப்பட்டுள்ளார். எனக்கு உறவினர்கள் யாரும் கிடையாது, அண்ணன்,

தம்பிகள் என்றும் யாரும் இல்லை. எனக்கு ஒரே உறவாக இருந்தது என் கணவர் மட்டும்தான். அவரையும் இழந்து தற்போது நான் தனியாக இருக்கிறேன். என்று கதறினார்.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ