மொழி, அஞ்சாதே, சிவகாசி, திருப்பதி, சிவாஜி, பாபநாசம், 8 தோட்டாக்கள், துப்பாக்கி முனை உட்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். இவருக்கு ஷீலா என்கிற மனைவியும், ஐஸ்வர்யா என்கிற மகளும், ஆதித்யா என்கிற மகனும் உள்ளனர். இவரது மகள் ஐஸ்வர்யா, என்.ஜி.கே. படத்தில் நடிகை ரகுல்பரீத் சிங், கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடிகை கயல் ஆனந்தி, ரம் படத்தில் நடிகை சஞ்சிதா ஷெட்டி உட்பட பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். தொழிலதிபர் சுதாகர் – சீனா தம்பதியின் மகன்
அகுல் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள அக்கார்ட் ஹோட்டலில் அன்று (13.06.2019) நடைபெற்றது. விழாவில் நடிகர் பிரபு, இளவரசு, ராஜு ஈஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிவில் எஞ்சினியர் படித்த மணமகன் அகுல் சென்னையில் உள்ள சதர்லேண்ட் நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர்களது புகைப்படம் இதோ