தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக 80களில் இருந்தவர் மோகன்.80களில் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருந்தவர் மோகன்.சினிமா பின்னணி இல்லாமல் வந்த மோகன் பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழ் தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ள மோகன் வருடா வருடம் சிறந்த நடிகருக்கான விருதையும் பெறுவார்.

70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மோஹனை எல்லாரும் மைக் மோகன் என்றே கூப்பிடுவார்கள்.குறிப்பாக ஒரு நாளைக்கு 18 மணி நேரத்துக்கும் மேல் நடிப்பிலேயே செலவிடும் மோகன் ஒரே வருடத்தில் அதிகமான படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். இவர் படம் வெளியானால் வெள்ளி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும்.ரஜினி மற்றும் கமல் அளவிற்கு ஒரு ரசிகர் பட்டாளத்துடன் வலம்வந்தவர் மோகன்.இப்படி பிடிக்க முடிய இடத்தில இருந்து தமிழ் சினிமாவில் வலம்வந்த மோகன் ஒரு நடிகை சொன்ன பொய்யால் அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது.

திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது நடிகர் மோகனின் மீது ஒரு பிரபல நடிகை காதல் வயப்பட்டார்.தனது காதலையும் மோகனிடம் கூறியுள்ளார்.ஆனால் காதலை மோகன் ஏற்கவில்லை.இதனால் கோபமடைந்த அந்த நடிகை மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக வதந்தியை கிளப்பிவிட்டார். அந்த காலத்தில் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளே உண்மை என அனைவராலும் நம்பப்பட்டது.சமூக வலைத்தளங்களில் பெரிய வளர்ச்சி இல்லாத அந்த சமயத்தில் இது உண்மை என எல்லாராலும் நம்பப்பட்டது.
அன்றிலிருந்து மோகனுக்கு படவாய்ப்புகள் குறைந்தன.எந்த நடிகையும் அவர் அருகில்கூட நெருங்கவில்லை.தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தெறித்து ஓடினர். பக்கத்துவீட்டுக்காரர் கூட அவரை வீட்டிற்குள் விடவில்லையாம்.விரக்தியில் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு சென்றுவிட்டார் மோகன்.தற்போது அத்தனையும் பொய் என நிரூபித்துவிட்டார்.
