இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஜீ.வி.பிரகாஷ். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு’ என்ற பாடலின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். ரஹ்மானின் அக்காவும், ஜி.வி-யின் அம்மாவுமான ஏ.ஆர்.ரெஹானா பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என சினிமாவில் பயணித்து வருகிறார். முதலில் இசையமைப்பாளராகி பின்னர் சினிமா ஹீரோவாக ட்ரான்ஸ்பார்ம் ஆனவர் அவர். ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையிலும் இசையமைக்கும் பணிகளுக்கும் கேப் விடாமல் ஜி.வி.பிரகாஷ் குமார், தான் நடிக்கும் படங்களுக்கு தானே இசையும் அமைக்கிறார்.

தற்போது அதே குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகை சினிமாவுக்கு வருகிறார். ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ தற்போது விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பவானி இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார். சமீபகாலமாக தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வந்த பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி நடிக்கும் ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் ஹீரோயினாக நடிக்க, பவானி ஸ்ரீ இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறாராம். பவானி ஸ்ரீ இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “க/பெ.ரணசிங்கம் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. மேலும்,
அந்த படத்தில் முக்கியமான ரோலில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.அந்த ட்வீட்டை எடுத்து தனது பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் பவானி ஸ்ரீக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
