சமீப காலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே போகின்றது. உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவின் நிலையே இப்படி என்றால், தமிழகத்தின் நிலையை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது. இதை உறுதி படுத்தும் விதத்தில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகின்றது. விழுப்புரம் மாவட்டம் சேர்ந்த வளவனூர் கிராமத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவிகளை சிலர் கேளி, கிண்டல் செய்வது தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வளவனூரில் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் துரத்திச் சென்று அவரை தாக்கி உள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து வளவனூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அந்த சிசிடிவி காட்சியில் பள்ளி மாணவியை இளைஞர் தாக்குவதாக கேமராவில் பதிவாகியுள்ளது. இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்