பிக்பாஸில் மதுவிற்கு உண்மையில் நடந்தது என்ன? கண்ணீருடன் வீடியோவை வெளியிட்ட மதுமிதா…

கடந்த மூன்று மாதங்களாக தனியார் தொலைக்காட்சியின் ஒன்றில் நடந்து வரும் ஷோ தான் பிக்பாஸ். இதில் 16 போட்டியாளர்களில் ஒருவராக வந்தவர்தான் மதுமிதா இவர் உதயநிதி மற்றும் சந்தானம் ஆகியோரிடம் இணைந்து நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இதற்கு பிறகு அஜித்,விஜய் பிரபல நட்சத்திரங்கலோடு இணைந்து நடித்திருக்கிறார். தற்போது பிக்பாஸிற்கு வந்த இவர் முதலில் சாதுவாக இருந்தார். அதற்க்கு பின் முதலில் சாண்டியுடம் தன் சண்டையை துவங்கினார்.

இதற்க்கு பிறகு கவினுடன் அவரது சொந்த பிர்ச்சனைகளை சண்டைக்கு இழுத்தார். இந்த சண்டை தான் இவருக்கு கடைசியில் எமனாக வந்தது என்று கூட சொல்லலாம். அதனால் தன் உயிரையும் மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு உச்சத்திருக்கே சென்றார் மதுமிதா. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் விதிகளை மீறியதாக கூறி இவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்.

இவர் இதன் பின் வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு என்னை அந்த வீட்டில் கொடுமை செய்தார்கள் என்று அனைத்து பேட்டியிலும் கூறினார். இப்படியிருக்க தற்போது இவரை கொடுமைபடுத்திய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதை நீங்களே பாருங்கள்.