பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பாத்திமா பாபு! கடைசியாக சொன்னது என்ன தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேறியுள்ளார். பிக்பாஸ் தொடங்கி இரண்டு வாரம் கடந்த நிலையில் முதல் எலிமினேசன் நேற்று நடந்தது. (நமக்கு இன்று ஒளிபரப்பாகும்). அதன்படி ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்கப்பட்டது. கடைசி வரை திக் திக் மனநிலையிலேயே நம்மை  வைத்திருந்தார்கள்.ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது பாத்திமா பாபு தான் என்று தெரியவந்துள்ளது. எலிமினேசனில் மதுமிதா இல்லை என்பது நேற்றே உறுதியாகிவிட்டது. அவரை விட்டார் மக்கள் அதிருப்திக்கு ஆளாக கூடிய நபர் என்றால் மீரா மிதுன் தான். ஆனால் மக்கள் மீரா மிதுனுக்கு வாக்களித்து காப்பாற்றிவிட்டதாக கமல் கூறுகிறார். அதே சமயம் மக்களின் வாக்கு பாத்திமாவுக்கு அவ்வளவுவாக வரவில்லை என்று கூறி அவரை வீட்டில் இருந்து வெளியேறுமாறு கூறினார்.

இதனை தொடர்ந்து தனது மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய பாத்திமா பாபு, வீட்டில் உள்ள மற்றவர்கள் வனிதாவிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறிவிட்டு புறப்பட்டார். கமலிடம் பேசும் போது கூட வனிதா தான் வீட்டின் பிரச்சனைகளுக்கு காரணம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.