சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5-வது பிளாக் 115வது தெருவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து து ர்நா ற்றம் வீசுவதாக பொலிசாருக்கு வந்த தகவலின் பேரில், போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது வீட்டுக்குள் ஆண், பெண் இரண்டு நபர்களின் உடல் அ ழுகிய நிலையில் கி டந்து ள்ளன.

படுக்கையறையில் உள்ள மெத்தையில் ஆணின் ச டலமும், மற்றொரு அறையில் பெண்ணின் ச டலும் கி டந்து ள்ளது. இவர்களுக்கு 45 வயதிலிருந்து 50 வயதிருக்கும் என போலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த உ டல்களை பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பிய போலிசாருக்கு, வீட்டிற்குள் இருந்து சின்னத்திரை நடிகர் சங்க அடையாள அட்டை ஒன்று இருந்துள்ளது. இதன் பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் இறந்தவர்கள் அண்ணன், தங்கையான ஸ்ரீதர் மற்றும் ஜெய கல்யாணி என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும், இதுவரை இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.