தமிழில் “பரதேசி” என்ற படத்தில் பாலா அறிமுகம் செய்த நடிகை ரித்விகா, பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து பேசப்படும் நடிகையானார். அதன்பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள ரித்விகா கமல் தொகுத்து வழங்கிய

பிக்பாஸ்-2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால் பல நடிகைகளுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்தபோதும் ரித்விகாவிற்கு எதுவும் அமையவில்லை. இடையில் டார்ச் லைட் என்ற படத்தில் சாலையோர விலைமாதர் வேடமேற்று நடித்தார். இருப்பினும் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும்

அவருக்கு பெரிதாக கைகொடுக்க வில்லை. இந்நிலையில் அவரும் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறி வருகிறார். அதையடுத்து லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோக்களை வெளியிட்டு பலரையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார். தஹ்ரபோது அப்புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

