பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக இசைப் பாடகர்கள் மீது மியூசிக் அகெடமி நடவடிக்கை எடுத்துள்ளது. மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது.கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி குற்றஞ்சாட்டினார்.இந்நிலையில் பிரபல கர்நாடக இசை கலைஞர்களான என். ரவிகிரண், ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஏ ஈஸ்வரன், ஶ்ரீமுஷ்னம் வி ராஜா ரவ், நாகை ஶ்ரீராம், ஆர் ரமேஷ் மற்றும் திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரின் பெயர்களில் பல பெண்கள் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சின்மயி டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.
இதையடுத்து இந்த ஏழு பேரும் மெட்ராஸ் மியூசிக் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் கச்சேரியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகெடமி தலைவர் என்.முரளி தெரிவித்துள்ளார்.இனிமேல் மியூசிக் அகெடமியில் இந்த ஏழு பேரும் பாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.