தங்கையின் அழுகையை நிறுத்த அண்ணன் எடுத்த ரிஸ்க்!… எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி

இந்த உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அது கொஞ்ச நஞ்சம் மனித உயிர்களுக்கிடையே நடமாடி கொண்டிருக்கும் அன்பு என்ற ஒன்றினால்தான்!! கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு சம்பவம்தான் இதனை நிரூபித்துள்ளது. அது தற்போது வீடியோவாகவும் வைரலாகியும் வருகிறது. குட்டி பெண் குழந்தை பாஸ்கட் பால் விளையாடுகிறாள். இதை அந்த குழந்தையின் அண்ணன் பார்த்து கொண்டே இருக்கிறான்.அதற்காக அந்த பாஸ்கட் பால் கூடை பக்கத்திலேயே போய் நின்று கொள்கிறாள். ஆனால் அந்த கூடையோ ரொம்ப உயரமாக இருக்கிறது. எட்டி கூட அந்த பந்தை போட முடியாத அளவுக்கு உயரம். அதனால் திரும்ப திரும்ப பாலை அந்த கூடைக்குள் போட முயற்சி செய்கிறாள். முடியவே இல்லை. தோற்று தோற்று போகிறாள். கடைசியில் அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. பீறிட்டு வெடித்து அழ ஆரம்பித்துவிடுகிறாள்.

இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவள் அண்ணனோ பதறி ஓடிவருகிறான் தங்கையிடம். அழும் தங்கையை தன் பிஞ்சு கைகளால் சமாதானப்படுத்துகிறான் சிறுவன். குட்டி தங்கையின் கண்ணீரை துடைத்து விடுகிறான். தன்னோடு அப்படியே அவளை கட்டிப்பிடித்து கொண்டு தேற்றுகிறான் சிறுவன். அப்போது, “நீ மிகவும் வலிமையானவள்.. அழாதே” என்று சொல்கிறான்.அழுகையின் ஈரம் காயாத தங்கையின் கன்னத்தில் முத்தம் தருகிறான்.

பிறகு பாஸ்கட் பந்தை கைகளில் எடுத்து தந்து… அவளை தூக்கிக்கொண்டு கூடைக்கு நெருக்கமாக அண்ணன் செல்ல… பந்தை சரியாக இந்த முறை தங்கை கூடையில் போட… வெடித்து சிரிக்கிறாள் தங்கை. அழுத தங்கை இப்போது சிரிப்பதை பார்த்து தானும் சிரிக்கிறான் அண்ணன்.

பறந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த விஞ்ஞான உலகில் இந்த காட்சியை ரசிப்பவர்கள் எத்தனை பேரோ தெரியாது. ஆனால் இந்த பாச பிணைப்பு வைரலபாகி இணையத்தை கெட்டியாக பிடித்து கொண்டுள்ளது. இதை இந்த குழந்தைகளின் தாயே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தன் இரண்டு குழந்தைகளும் பாசிட்டிவாகவும், உறவு, மற்றும் உணர்வுகளின் மகத்துவம் புரிந்தவர்களாகவும் இருப்பதை எண்ணி தான் மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.