சென்னையில் தனது காதல் கணவனை விட தனது செல்ல நாய்தான் முக்கியம் என்பதற்காக நாயை கொலை செய்த கணவனை பொலிசில் காட்டிக்கொடுத்துள்ளார் மனைவி.ஜெகநாத் – செல்வி ஆகிய இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்துகொண்டனர்.செல்விக்கு நாய் என்றால் அதிகப் பிரியம். இதனால், பர்னி என்ற செல்லநாயை வளர்த்து வந்துள்ளார்.காதலிக்கும்போது, ஜெகநாத்தும் பர்னி மீது பாசமாக இருந்துள்ளார், ஆனால் திருமணத்துக்கு பிறகு ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக தனது கோவத்தை பர்னி நாயிடம் காட்ட ஆரம்பித்துள்ளார். மேடவாக்கத்தில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு பர்னியுடன் சென்றுள்ளார் செல்வி. இது, ஜெகநாத்துக்குப் பிடிக்கவில்லை.
இதனால் கோபம் கொண்ட ஜெகநாத் குடித்துவிட்டு வந்து பர்னியை அடித்துள்ளார், இதனை தட்டிக்கேட்ட செல்வியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தபோது அவரது பிடியில் இருந்து செல்வி தப்பித்து ஓடியுள்ளார்.இதனால் அவருக்கு கோபம் அதிகமாக, பர்னியை அடித்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து செல்வி பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் ஜெகநாத்தை கைது செய்துள்ளனர்.மேலும், தனது காதலனை விட நாய்தான் எனக்கு முக்கியம். நாயை கொலை செய்த குற்றத்திற்காக.
எனது கணவர் சிறைக்கு போனால் கூட பரவாயில்லை என செல்வி பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு ஜெகநாத்திடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.