
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி வாகைச் சூடிய செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.இந்நிலையில் அவரின் மனைவியுடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.இதில், கணவன், மனைவி இரண்டு பேரும் சந்தேகப்பட வேண்டும் என்றும், அவரின் சந்தேகம் எப்படி அமைய வேண்டும் என்று தெளிவுப்படுத்தியுள்ளனர்.இதேவேளை, பலரின் காதல் திருமணத்திற்கு பின்னர் தோல்வியில் முறிந்து விடும்.
ஆனால், இவர்களின் காதல் இன்றும் வெற்றி வாகைச்சூட காரணம் திருமணத்திற்கு பின்னரும் காதலிப்பது என்று கூறியுள்ளார்கள்.மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவதற்கு முன்னர் இவர்களுக்கான சம்பளம் நினைத்த அளவு கிடைக்காது என்ற அதிர்ச்சி தகவலை சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்டுள்ளார்.
சிலர் தருவதாக கூறி, பாதி பணத்தை குறைத்துதான் கொடுப்பார்களாம். அப்போது எல்லாம் மனது உடைந்து நொருங்கி விடும் எனவும் கூறியுள்ளார்.இதேவேளை, தற்போது கலைஞர்களுக்கும், கலைக்கும் ஏற்ற மரியாதை வழங்கப்படுவதில்லை.
இவ்வாறான பல சோகமான நாட்களை நகர்ந்துதான் வெற்றிப்பாதைக்கு வந்ததாக ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.மேலும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.