அட… குடும்ப குத்து விளக்காக இருந்த அபர்ணதியா இது..? மார்டர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அபர்ணதி. பிரபல தொலைக்காட்சியில் ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலமான நடந்த நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை.

16 பெண்கள் இதில் கலந்து கொண்டாலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் அபர்ணதி. தமிழ்ப்பெண்ணான இவர் சரளமான தன்னுடைய பேச்சால், ரசிகர்களை அதிகம் கவர்ந்தார், ஆர்யாவையும் அதிகம் நேசித்தார் என்றே கூறலாம்.

இதனையடுத்து தமிழில் படவாய்ப்புகளும் வர, வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்துள்ளார் இந்நிலையில் இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷீட் படங்கள் வைரலாகி வருகிறது, சில மாதங்களுக்கு முன் கூட இவர் தன்னுடைய பெயருக்கு பின்னால் ‘6 ya’ என்று இணைத்திருக்கிறார்.

இதைப்பார்த்த பலரும் ஆர்யாவை இன்னும் அபர்ணதி காதலித்து வருகிறாரா என கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.