அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த சீமந்தம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

விஜய் டிவியில் பங்குபெறும் அனைத்து கலைஞர்களும் எப்படியாவது பிரபலம் அடைந்து விடுவார்கள். அதிலும் “கலக்க போவது யாரு” நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், மதுரை முத்து, என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான பெண் அறந்தாங்கி நிஷா.

இவருடைய கலகலப்பான பேச்சு, தன்னை மற்றும் தன் கணவரை மற்றும் குடும்பத்தாரையே வைத்து காமெடி செய்வது போன்றவைகளால் இவரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்தது. சமீபத்தில் நிஷாவும் அவரது கணவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று இவரது கணவரும் பிரபலம் ஆனார்.


அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது, தொகுத்து வழங்குவது என பிசியாக இருக்கும் நிஷா கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் செய்திகள் வந்தது. இந்த நிலையில் அவருக்கு நடந்த சீமந்தத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

Ennaya vittu poirathanu rompa kenjunarupa enna pannalam

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on