இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியர்கள்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பிரதமர் மோடி மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாகவே, பாகிஸ்தானினால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு.

இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும். பாகிஸ்தானின் பிடியில் மிக மோசமான நிலையில் இருந்த போதும், அபிநந்தன் வெளிப்படுத்திய மன உறுதியும், நாட்டுப்பற்றும் இந்தியர்களின் இதயத்தை வென்றதாகவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அபிந்தனின் வீரத்தையும், மன உறுதியையும் பாராட்டும் வகையில், அவருக்கு பரம்வீர் சக்ரா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கடிதம் மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தகவலை கேட்ட இந்தியர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே அபிநந்தன் என்ற பெயரை யார் சொன்னாலும் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.