உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத வருமானம் இதுதான்..!!

முகேஷ் திருபாய் அம்பானி இந்தியாவின் No.1 பணக்காரர் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் நிர்வகித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேசளவில் கவனம் பெற்றது. இவரது மனைவி நீட்டா அம்பானியும் இந்தியாவில் பிரபலமான பெண் தொழிலதிபர். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் முகேஷ் அம்பானியின் வாழ்க்கை ஆடம்பரத்தின் உச்சம். சமீபத்திய தகவலின் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.2,57,900 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மும்பையின் அல்டாமவுன்ட் சாலையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீடு, உலகளவில் இருக்கும் ஆடம்பரமான கட்டிடங்களில் ஒன்று. மும்பையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீடு, மொத்தம் 27 அடுக்குகள் கொண்டது.

இக்கட்டிடத்தில் சுமார் 6 மாடிகள் கார் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் இந்த கார்கள், உலகின் ஆடம்பர விலையுயர்ந்த மாடல்களாகும். வெறும் கார்களை பார்க்கிங் செய்யப்படும் தளங்களாக மட்டுமில்லாமல், அதற்கான மொத்த மெக்கானிசத்தையும் அம்பானி வீட்டின் அந்த 6 தளங்கள் பெற்றுள்ளன.

முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுவது எளிய காரியமல்ல. அவரது ஓட்டுனர்களை தேர்ந்தெடுக்கும் ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களிடம் போடப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் சில டிரைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கின்றன. பயிற்சிகள் முடிந்த பின், டிரைவர்களுக்கு சில தேர்வுகள் வைக்கப்படும்.

அதில், தேர்வாகும் டிரைவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும். அதாவது மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஓட்டுநர்கள் வரை முகேஷ் அம்பானியிடம் பணிபுரிகிறார்கள். அதிலும் குறிப்பாக அவரது பிரத்யேக கார் ஓட்டுநருக்கு மற்றவர்களை விட அதிக ஊதியம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.