உல்லாசமாக இருக்கும் போதெல்லாம் அழுதாள்..! பெற்ற தாயின் சம்மதத்துடன் மகளுக்கு காதலனால் அரங்கேறிய பயங்கரம்!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டூபாளையத்தை சேர்ந்தவர் ரூபிணி. இவர் பால்ராஜ் என்பவரை திருமணம் செய்து இவர்கள் இருவருக்கும் 3 வயதில் தேவிஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரூபினி தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். ரூபினியும் மூன்று வயது தேவிஸ்ரீ என்ற மகளும் ஒன்றாக இருந்து வந்துள்ளனர். ரூபினி தன் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கோவில்பட்டியை சேர்ந்த சர்குணம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சற்குணமும் ரூபினியும் காதல் செய்து வந்த நிலையில் கடந்த மே மாதம் 26ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் ரூபினி. பின்னர் சற்குணம் மற்றும் ரூபினி ஆகிய இருவரும் சரவணம்பட்டி பகுதியில் வீடு தேடி அலைந்து இருக்கின்றனர் வீடு கிடைக்காததால் அங்கிருந்த பள்ளி ஒன்றில் இரவு தங்கி இருக்கின்றனர். இரவு நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர் . அப்போது அவர்களது சந்தோசத்திற்கு தடையாக இருந்த 3 வயது பெண் குழந்தையான தேவிஸ்ரீயை தீர்த்துக்கட்டிவிடலாம் என்று சற்குணம் கூறியிருக்கிறார். முதலில் அதற்கு ஒப்புக்கொள்ளாத ரூபினி பின்னர் சம்மதித்துள்ளார்.


அந்த குழந்தையை அருகில் இருந்த கோவிலுக்கு இருவரும் சேர்ந்து தூக்கி சென்றனர் . பின்னர் துணியை சுற்றி அதன் வாய் தொண்டையில் அடைத்துள்ளனர். பின்னர் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்த இருக்கிறது. அங்கே அருகிலிருந்த முட்புதரில் அதனை சர்குணம் வீசிவிட்டு பெங்களூரில் கட்டிட வேலை பார்ப்பதாக சென்றிருக்கிறார்.பின்னர் குழந்தை ஒன்று இறந்த நிலையில் பிணமாக முட்புதரில் கிடைப்பதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின்


உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்நிலையை ரூபினி தன்னுடைய 3 வயது குழந்தை தேவிஸ்ரீ காணவில்லை என்று நாடகமாடி இருக்கிறார். உடனே போலீசார் ரூபிணியை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரண்பாடாக பதில் அளித்ததை வைத்து குற்றத்தில் ஈடுபட்டது அவர்கள் இருவரும் தான் பின்னர் வழக்கு பதிவு செய்து ரூபிணியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தலைமறைவாக இருந்த சர்குணத்தையும் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவில் கட்டிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்த சற்குணத்தை சுமார் ஏழு மாதங்கள் கழித்து தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் போலீசார் சற்குணத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சர்குணம் தங்களது உல்லாசத்துக்கு தடையாக இருந்ததால் தான் இப்படி செய்தோம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து போலீசார் சர்குணத்திற்கு உரிய தண்டனையை வழங்கி சிறையில் அடைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.