ஸ்ரீரெட்டி இந்த பெயரை யாருமே மறக்க முடியாது.சில மாதங்களுக்கு முன்பு பட வாய்ப்பு தருவதற்காக நடிகைகளை பா லியலுக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு திரையுலகில் உள்ளதாக தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் மீது பா லியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அதற்கான ஆதாரங்களை SRI REDDY, SRI LEAKS என்றை வலைபக்கத்தில் பதிவிட்டு தெலுங்கு சினிமாவில் புயலைக் கிளப்பினார்.

பட வாய்ப்பு தருவதற்காக முக்கிய பிரமுகர் சிலர் தம்மை அழைப்பதாக கூறியது முதல் தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளவில்லை என்பது வரை அவரது குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே சென்றன.

இப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுக்கொண்டே தான் இருக்கிறார். சமூக வலைதளமே கதியாக கிடக்கும் இவர் தற்போது யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில், சமையல் , அழகு குறிப்புகள் வீடியோவை பதிவு செய்து வந்த அவர் தற்போது புடவை எப்படி கட்டுவது என வீடியோவை வெளியிட்டுள்ளார்.