என் அம்மாவை ஒன்னும் செஞ்சுடாதீங்க! சுடுகாட்டில் பாசப்போராட்டம் நடத்திய போலீஸ்!

தூத்துக்குடியில் தீயணைப்பு துறை காவலராக பணியாற்றி வருபவர் பாட்ஷா இவரது தாய் முகமது பீபி சில நாட்களுக்கு முன்னதாக உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இஸ்லாமிய மதத்தின் நம்பிக்கை ரீதியாக இறந்தவரின் உடலில் இரத்தக் காயங்கள் இருப்பது அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் பாட்சா அதிலும் புரட்சி செய்தவர் ஆம், இறந்த தன்னுடைய தாயின் கண்களை தானம் செய்துள்ளார் இதனால் பல எதிர்ப்புகளையும் சந்தித்தார். இந்த நிலையில் துறைமுகத்தின் வளாகத்தில் தனது தாயின் உடலை புதைத்து நாய்கள் தோண்டி எடுக்காமல் இருக்க வேலி அமைத்துள்ளார், ஆனால்  துறைமுகம்

சார்பாக அங்கிருந்து உடலை அப்புறப்படுத்த போவதாக வந்த தகவலை அடுத்து தாயின் சமாதி அருகிலேயே அமர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டார் பாட்சா. நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் தான் போராட்டத்தை கை விட்டார். மேலும் அன்றே அவருக்கு பணியிடை நீக்க நோட்டிஸ் அனுப்பட்டதால் அதிர்ந்து போன பாட்சா, தாயிற்க்காக இந்த நிலை என்றால் பரவாயில்லை என கேட்போரை உருக செய்கிறது.