என் செல்போன் உடஞ்சிருச்சி.. எங்க அப்பா கவுன்சிலர்: செல்பி எடுத்த வாலிபர் அதிரடி பேட்டி!

இந்த செல்ஃபி மோகத்தால பல பிரச்சனைகள் வந்துள்ளது. ஏன் பல உயிர்களே பலியாகியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று செல்ஃபியால் விசித்திரமான ஒரு சம்பவம் நிகழ்ந்து அது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல நடிகரின் தந்தை சிவகுமார் மதுரையில் மருத்துவமனை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது ஒரு வாலிபர் வழக்கம் போல் செல்பி எடுக்க அதை பார்த்து கடுப்பான சிவகுமார் செல்போனை தட்டி விட அந்த காணொளிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தான் இவ்வாறு செய்திருக்கக் கூடாது என சிவகுமார் இன்று வருத்தம் தெரிவித்திருக்கும் நிலையில் என் 19 ஆயிரம் ரூபாய் செல்போன் போச்சே இப்ப யாரு வாங்க தருவா என அந்த வாலிபர் பேட்டி அளித்துள்ளர்.

எங்க அப்பா கவுன்சிலர் எங்க வீட்டு பக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி திறந்தாங்க அதுக்கு துணை முதலமைச்சர் ஒபிஎஸ் வர்றதா இருந்தது எங்க அப்பா என்னைய கூட்டிட்டு போனாரு ஒபிஎஸ் அவங்க வரல அதுக்குல பதிலா அமைச்சர் உதயகுமார் வந்தாங்க அவரோட நான் செல்பி எடுத்தேன். அவர் ஒன்னும் சொல்லல. ஆனா இவரு தான் என் செல்போன தட்டிவிட்டுடாரு. அது என் செல்போனு கூட இல்ல என் அண்ண செல்போன் 19 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போன் உடஞ்சிருச்சு இப்ப நான் எங்க அண்ணணுக்கு என்ன சொல்ல போறனோ தெரிலயே என அந்த வாலிபர் தற்போது பேட்டி அளித்துள்ளார்.செல்போனை தட்டிவிட்டது தவறு என சமூக வலைதளத்தில் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து சிவகுமார் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.